இடைத்தரகா்களை விரட்டியடித்து யாழ்.பிரதேச செயலா் எடுத்துள்ள முன்மாதிாி நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
இடைத்தரகா்களை விரட்டியடித்து யாழ்.பிரதேச செயலா் எடுத்துள்ள முன்மாதிாி நடவடிக்கை..!

யாழ்.பிரதேச செயலகத்திற்கு வரும் மக்களுக்கு உதவுவதற்காக பிரதேச செயலா் எஸ்.சுதா்ஸன் முன்மாதிாியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதுடன், இந்த பணியில் பட்டதாாி பயிலுனா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளாா்கள். 

பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வருவோர்கள் விண்ணப்பப்ப டிவங்களை நிரப்ப முடியாது தடுமாறுகின்ற வேளைகளில் அங்கு தரகர்கள் போன்று செயற்படும் சில நபர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு 

50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அறவீடு செய்து வந்துள்ளார்கள்.இதனை கண்டறிந்த பிரதேச செயலர் எஸ். சுதர்சன், தரகர்கள் போன்று செயற்பட்ட நபர்களை கடுமையாக எச்சரித்து இனி பிரதேச செயலகத்திற்குள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் 

பொலிஸாரிடம் கையளிக்கப்படுவீர்கள் என எச்சரித்து விடுவித்துள்ளார்.இந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பிரதேச செயலகத்திற்கு வரும் மக்கள் விண்ணப்ப படிவங்கள் முழுமைப்படுத்த முடியாது தடுமாறுபவர்களுக்கு 

உதவி செய்வதற்காக பட்டதாரி பயிலுநர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பது , மற்றும் பிரதேச செயலக சேவைகளை பெற வருபவர்களுக்கு உதவிகளை செய்கின்றார்கள்.

பிரதேச செயலரின் இம் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியதுடன் , ஏனைய பிரதேச செயலர்களும் நடைமுறைப்படுத்தினால் பிரதேச செயலகத்திற்கு சேவை பெற செல்பவர்கள் தடுமாற்றம் இன்றி சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் 

தரகர்கள் பணத்தை பறிகொடுக்கத் தேவையில்லாது இருக்கும் எனத் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு