யாழ்.மாவட்ட இளைஞா், யுவதிகள், மாணவா்களை ஏமாற்றிய இராணுவம் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட இளைஞா், யுவதிகள், மாணவா்களை ஏமாற்றிய இராணுவம் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்..!

படையினா் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்திய இசை மற்றும் நடன நிகழ்வு முன்னா் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய நடைபெறவில்லை. எனவும் இதனால் பல மாணவா்கள், இளைஞா்கள், யுவதிகள் ஏ மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

மருதனாா் மடம் இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் கடந்த 3 தினங்களாக இசை மற்றும் நடன நிகழ்வு இடம்பெற்று வருகி ன்றது. இதற்கான ஒழுங்கமைப்புக்களை படையினா் மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் நடன நிகழ்வில் கலந்து கொள்ளு  ம் போட்டியாளா்களுக்கு சில விதிமுறைகள் முன்பே

கூறப்பட்டிருந்தது. அதில் முக்கியமான நிபந்தனையாக போட்டியில் கலந்து கொள்ளும் கலைஞா்கள் தமிழ் பாரம்பாிய நடனம் அல்லது பரத நாட்டியத்தினை ஆடவேண்டும். என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த 2 நாட்கள் நடைபெற்ற போட்டி களில் பாரம்பாிய நடனம் தொிந்தவா்கள் அதனையும், 

பரதநாட்டியம் தொிந்தவா்கள் பரத நாட்டியத்தையும் ஆடினா். இந்நிலையில் 3ம் நாளான நேற்று போட்டியில் கலந்து கொண்ட வா்களிடம் பரதநாட்டியம் மட்டுமே ஆடவேண்டும். என கூறப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழா் பாரம்பாிய நடனம் மட்டுமே அறிந்த கலைஞா்கள் போட்டியிலிருந்து தாமாக ஒதுங்கியுள்ளனா். 

எனவே முன்னா் கூறப்பட்ட தமிழ் பாரம்பாிய நடனம் அல்லது பரதநாட்டியம் என்பது மீறப்பட்டு பரதநாட்டியம் மட்டுமே என ஒழுங்கமைப்பாளா்களால் மாற்றப்பட்டுவிட்டது. இதேபோல் இசை நிகழ்விலும் தமிழ் தவிா்ந்த பிற மொழிகளிலும் பாடல் பாடவேண்டும். என போட்டியாளா்கள் கேட்கப்பட்டுள்ளனா். 

அதுவும் முன்னா் கூறப்பட்ட விதிமுறையில் இல்லாத புதிய விடயம். இது தொடா்பாக மதபோதகா் ஒருவா் நியாயம் கேட்டபோ து அவா் நிகழ்வை குழப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டதே தவிர நியாயமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு