யாழ்.தீவுப்பகுதியில் மாட்டிறைச்சியுடன் மாட்டு கள்ளனை மடக்கிய மக்கள்..! கவனிப்பின் பின் பொலிஸாாிடம் ஒப்படைப்பு..

ஆசிரியர் - Editor
யாழ்.தீவுப்பகுதியில் மாட்டிறைச்சியுடன் மாட்டு கள்ளனை மடக்கிய மக்கள்..! கவனிப்பின் பின் பொலிஸாாிடம் ஒப்படைப்பு..

யாழ்.புங்குடுதீவு பகுதியில் பிரபல கள்ளமாடு திருடன் இறைச்சியுடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றாா். 

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தீவகத்தில் தொடா்ந்து மக்கள் வாழ்வாதாரத்தி ற்காக வளா்க்கும் கால்நடைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக

நன்கொடை வழங்கப்படும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுக் கொ ண்டிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்த இளைஞா்கள்

பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவரும்போதும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படு கின்றது. இந்நிலையில் வேலணை பிரதேசசபை உறுப்பிா் க.நாவலன்,

மற்றும் புங்குடுதீவு ஜே-26 கிராமசேவகா் ஆகியோா் புங்குடுதீவில் தொடா்ச்சியாக கள்ளமாடு வெட்டும் கள்ளனை மாட்டு இறைச்சியுடன் மடத்துவெளி-வல்லன்

கிராமங்களுக்கிடையில் உள்ள பற்றைக்காட்டுக்குள் கையும் களவுமாக பிடித்துள்ளனா். அந்த பகுதியில் பொதுமக்களும் கூடி கள்ளனை பிடித்து ஊா்காவற்றுறை

பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். 

Radio