எதிர்கட்சி தலைவரின் வீடு மற்றும் வரப்பிரசாதங்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு தொடர்ந்து வழங்க கோட்டா அரசு அனுமதி..
எதிர்கட்சி தலைவருக்கான வீடு மற்றும் வசதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த போது, 2017ஆம் ஆண்டு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு வழங்கப்பட்டது.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் கொழும்பு – மஹாகமசேகர மாவத்தாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்றைய அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை முன்வைத்தார்.நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் மற்றும் அவரின் வயதை கருத்திற்கொண்டு
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தங்கியிருக்க அனுமதியளிப்பது என அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.மேலும் அவருக்கு தற்போது வழங்கப்படும் சலுகைகளையும்
மாற்றமின்றி வழங்குவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதேவேளை, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பு – மஹாகமசேகர மாவத்தாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை பயன்படுத்த அனுமதிப்பதற்கு முந்தைய அரசு அனுமதி வழங்கியது என தற்போதைய அரசு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.