அங்கஜன் எம்பியின் பொங்கல் வாழ்த்து செய்தி

ஆசிரியர் - Admin
அங்கஜன் எம்பியின் பொங்கல் வாழ்த்து செய்தி

பூர்வீக தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தை திருநாள் இன்று. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும், பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திரு நாள்.

தமிழர்களும் நமது கலாச்சார பாரம்பரியங்களும் உறவுகளுடன் உணர்வுடன் இணைந்து சங்கமிக்கும் பெருநாள்.

பன்மைத்துவ எமது நாட்டில் நமது நாகரீக பாரம்பரியங்கள் சமத்துவத்துடன் கூடிய நல்லிணக்கத்திற்கு வரமளிக்கின்றது. நாம் இடும் விதைகளே விருட்சமாகின்றது. பயிரிடும் பலாபலன்களை நாமே அறுவடை செய்தாக வேண்டும்.

நாம் விதைத்த விதையில் இருந்து கிடைத்த அறுவடையில் பொங்கல் பொங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்து சுவைத்து மகிழ்வது போன்று கலை,மொழி,சமய ரீதியாக நாம் அனைவருடனும் இணைந்து சமத்துவத்துடன் கூடிய பற்றுடன் சங்கமிப்போம்.

பொங்கலின் சுவையை எப்படி உணர்கின்றோமோ அவ்வாறே சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் இவ் நாட்டின் சந்ததியினராக இணைந்து ,எமது இலங்கை நாட்டின் சுபீட்சத்திற்காக நற் பண்புகளை ஊடுகடத்துவோம்.

இவ் நாட்டிற்காக வியர்வை சிந்தி உரமாக்கும் விவசாயிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் அனைவரும் நன்றி செலுத்துவதற்குரியவர்களே. உலகளவில் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஏனையோருக்கும் எமது நன்றி தெரிவிக்கும் நாகரீகத்தின் உணர்வினை உணவின் விருந்தாக்குவோம்.

பாதுகாப்பான தேசத்தில் தொலை நோக்கான சிந்தனைகளுடன் செயற்பட்டு நாம் அனைவரும் நல் வழிகளில் பயணிக்க ஒளிமயமான எதிர்காலம் தொடரட்டும்.

வான்மழையை, செங்கதிரை, புத்தாண்டை, ஏர் உழவை, முத்தமிழைப் போற்றுகின்ற பொங்கல் பெருவிழாவில் பொங்கும் இன்பம் எங்கும் தங்குக! எங்கும் பரவுக!

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...


Radio
×