தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற பிரார்த்திப்போம்!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற பிரார்த்திப்போம்!

நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந்நன்நாளில் பிரார்த்திக்கிறேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன். 

நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போமாக

Radio
×