யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பௌத்த மத திணிப்பு..! ஒழுங்கை மீறி பெருமளவு நிதியில் விகாரை, பள்ளிவாசல் யாா் அனுமதி..?
யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் மத முரண்பாட்டை உண்டாக்கும் வகையில் பல்கலைகழக ஒழுங்கை மீறி விகாரை மற்றும் பள்ளிவாசல் கட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது.
யாழ் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கடந்த வருடம் நான்கு மதங்களுக்குமான ஆலயங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டினார்கள். நாட்டப்பட்டு சில மாதங்களின் பின் கீழ்வரும்
மத ஸ்தலங்களின் கட்டுமான பணிகள் பின்வருமாரு காட்சி அளிக்கின்றன. அந்த வகையில் அதிக பணச்செலவில் பிரமாண்டமான வகையில் விகாரையும் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான விடுதிகளும்
அமைக்கப்பட்டு வரும் அதேவேளை அவ்வளாகத்தில் பிள்ளையார் ஆலயம் ஒரு மரத்தின் கீழ் சிறிய குடிசை ஒன்றிலேயே இயங்கி வருகிறது அதே போன்று கிறிஸ்தவ தேவாலயம் எந்தவிதமான கட்டுமானங்களும் இல்லாமல் காட்சி அளிக்கின்றது.
பௌத்த விகாரைக்கும், பள்ளிவாசலுக்கும் பல்கலைகழக ஒழுங்கை மீறி பெருமளவு நிதி வெளியிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.