எம்சிசியை கிழித்தெறியத் தயார்! - சஜித் சவால்

ஆசிரியர் - Admin
எம்சிசியை கிழித்தெறியத் தயார்! - சஜித் சவால்

நாட்டுக்கு அச்சுறுத்தல் என தெரிவித்த மிலேனியம் சவால் நிறுவன ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெரிய அரசாங்கம் தயார் என்றால் நாங்கள் தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஆதரவளிப்போம். ஆனால் நாட்டில் இனவாதம், மதவாதத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரிவாக்குவதன் மூலமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

அதனால் அரசாங்கம் தெரிவிக்கும் மக்கள் மயமான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது. அரசாங்கம் மக்களுக்கு அளித்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பொதுத்தேர்தல் வரை பார்த்துக் கொண்டிருக்கமாமல் விரைவாக வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Radio
×