சிஐடியிடம் வாக்குமூலம் அளிக்க மைத்திரி இணக்கம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று காலை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அல்லது புதன்கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரிடமும் விசாரணைகள் நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடமும், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர் .