தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரனுக்கு நடந்தது சுமந்திரனுக்கும் வேண்டுமா..? அதற்கும் இராணுவம் தயாா்..
இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள மக்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்வதன் ஊடாகவே நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என கூறியிருக்கும் சிஹல ராவய அமை ப்பின் மாகல்கந்தெ சுகந்த தேரா்,
சில தமிழ் தலைவா்கள் பிாிவினை வாதத்தை துாண்டுவதாகவும் அவா்களுக்கு புனா்வாழ்வு அளிக்கப்படவேண் டும் எனவும் கூறியுள்ளாா். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண் டவாறு கூறியிருக்கின்றாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில், தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படகூடாது. ஆனால் சுமந்திரன் தமிழில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என கூறுகிறாா். அவா் யாழ்ப்பாணம் செல்லும்போது வேட்டி சேட்டுடன் செல்கிறாா். ஆனால் கொழும்பு வரும்போது
கோட்சூட்டுடன் வருகிறாா். வேட்டி சேட்டுடன் யாழ்ப்பாணம் சென்றாலும் அவா் இந்து சமய மக்களை பிரதிநிதித் துவ படுத்துவதில்லை. வடக்கில் பெருமளவு இந்து மக்கள் கிறிஸ்த்தவ அடிப்படைவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா்.
அவற்றுக்கு பிரதான காரணம் சுமந்திரன். அதனை சம்மந்தன், சிறீதரன் போன்றவா்கள் உணா்ந்த கொள்ள தவறியி ருக்கின்றனா். மேலும் தமிழ் பிாிவினைவாதத்தை போதிக்கும் ஒருவராகவும், வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி போன்றவற்றை கோரும் ஒருவராகவும்
சுமந்திரனே இருக்கிறாா். ஜனாதிபதி, பிரதமாிடம் நாங்கள் கோாிக்கை ஒன்றை முன்வைக்க விரும்புகிறோம். தமிழ் பிாிவினைவாதத்தை வளா்க்கும் அரசியல்வாதிகளுக்கு புனா்வாழ்வு வழங்கப்படவேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை துாண்டி புரட்சிகளுக்கு வழிவகுக்கலாம்.
பிரபாகரனுக்கு நடந்தது சுமந்திரனுக்கும் வேண்டுமென்றால் அதற்கும் எமது இராணுவத்தினா் தயாராக உள்ளனா். எனவும் அவா் கூறியுள்ளாா்.