ஓட்டுமடம் சந்தியில் இருந்து வலந்தலைச் சந்தி வரை வீதியை மறித்து போராடுவோமா? பொது அமைப்புக்கள் யோசனை..
யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் பெருந்தெருவைப் புனரமைக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவோமா? யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியில் இருந்து வலந்தலைச் சந்தி வரை இப்போராட்டம் விரிவுபடுத்தப்படவேண்டும்.
ஓட்டுமடம் சந்தி, ஆனைக்கோட்டை மதவடி, ஆனைக்கோட்டைச் சந்தி, கூழாவடி, சுதுமலைச் சந்தி, மானிப்பாய் நகர், மருதடிச் சந்தி, கட்டுடைச் சந்தி, சண்டிலிப்பாய் சந்தி, கூடத்து மனோன்மணி அம்மன் ஆலய முன்றல், சங்கானை நகர்,
சங்கானை ப.நோ.கூ சங்க முன்றல், சித்தங்கேணிச் சந்தி, வழக்கம்பரைச் சந்தி, சத்தியக்காட்டுச் சந்தி, சுழிபுரம் சந்தி, மூளாய் பிள்ளையார் கோயிலடி, மூளாய் அரசடிச் சந்தி, பொன்னாலைச் சந்தி, வலந்தலைச் சந்தி ஆகிய சந்திகளில்
போராட்டங்கள் நடைபெறவேண்டும்.ஒவ்வொரு சந்திகளிலும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகக் குறைந்தது ஐம்பது இளைஞர், யுவதிகள் ஒன்றுகூடி வீதி மறிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது.அப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து
அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இப்போராட்டத்தை வழிநடத்தலாம்.வார நாள்களில் ஒரு நாளைத் தெரிவுசெய்து காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை
இரு மணித்தியாலங்கள் வீதி மறிப்பு போராட்டத்தை நடத்துவது. இதன் மூலம் வலிகாமத்தில் உள்ள சில அலுவலகப் பணிகளையும் ஸ்தம்பிக்க வைக்க முடியும்.போராட்டத்தின்போது, ஒவ்வொரு சந்திகளிலும் தலைமை வகிக்கும் இளைஞர்களுக்கு இடையே
தொடர்பு பேணப்படல் போராட்டத்தை வெற்றிகரமானதாக மாற்றுவதற்கு உதவும்.போராடத்தின் முடிவில் ஒவ்வொரு இடத்திலும் தலைமை ஏற்கும் இளைஞர்கள் ஓட்டுமடம் சந்தியில் ஒன்றுகூடி அங்கிருந்து யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் உரிய திணைக்களங்களுக்குச் சென்று
மகஜர் கையளிக்கவேண்டும்.இதை முன்னெடுக்க ஆர்வம் கொண்டுள்ள - மற்றும் மேற்குறிப்பிட்ட சந்திகளில் போராட்டத்தை தலைமையேற்கவுள்ள இளைஞர்கள் இப்பதிவின் கீழ் தமது விருப்பத்தை தெரிவியுங்கள். விரும்பியோ விரும்பாவிட்டாலோ
போராட்டமே எமது வாழ்கையாகவும் வாழ்க்கையே போராட்டமாகவும் மாறிவிட்டது.