SuperTopAds

நாடாளுமன்ற தேர்தல் ஆசன பங்கீட்டில் கூட்டமைப்புக்குள் குடும்மி பிடி சண்டை..! தமிழரசு கட்சி முன்னணியில்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தல் ஆசன பங்கீட்டில் கூட்டமைப்புக்குள் குடும்மி பிடி சண்டை..! தமிழரசு கட்சி முன்னணியில்..

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆசன பங்கீடு தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் குடும்பிடி சண்டை தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது. இதற்கிடையில் ஆசன பங்கீட்டில் தமிழரசு கட்சி விடாப்பிடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

ஏப்ரலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு தொடர்பில் ஆராயும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டம் முடிவு எட்டப்படாத நிலையில் வரும் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

வன்னித் தேர்தல் தொகுதியில் 3 வேட்பாளர்களைக் களமிறக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கோரியுள்ள போதும் தமிழ் அரசுக் கட்சி அதற்கு இணங்கவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் 

மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் 9 வேட்பாளர்களைக் களமிறக்கப்படவேண்டும். அதில் ரெலோவுக்கு 2 வேட்பாளர்களையும் பளொட்டுக்கு ஒரு வேட்பாளரையும் ஒதுக்கீடு செய்யவதே தமிழ் அரசுக் கட்சியின் 

நிலைப்பாடாக உள்ளது.6 வேட்பாளர்களை களமிறக்குவதில் தமிழ் அரசுக் கட்சி உறுதியாகவுள்ளது.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புளொட் கட்சி இரண்டு வேட்பாளர்களைக் களமிறக்க கோரும் போதும் ஒன்றை மட்டுமே வழங்குவது 

என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் அரசுக் கட்சி உள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இணைந்த யாழ்.தேர்தல் மாவட்டதில் 10 வேட்பாளர்களைக் களமிறக்க முடியும் என்ற நிலையில் 7 வேட்பாளர்களைக் களமிறகுவதில் தமிழ் அரசுக் கட்சி உறுதியாகவுள்ளது.

இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் ரெலோ மற்றும் புளொட் கட்சிகளை அதிக வேட்பாளர்களைக் களமிறக்குமாறு தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 

3 வேட்பாளர்களை களமிறக்குவதில் ரெலோவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களைக் களமிறக்குவதில் புளொட்டும் உறுதியாகவுள்ளன என்று அந்தக் கட்சிகளின் தகவல்கள் தெரிவித்தன.