றாஜித சேனாரத்ன வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த விசேட அதிரடிப்படை..!

ஆசிரியர் - Editor I
றாஜித சேனாரத்ன வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த விசேட அதிரடிப்படை..!

முன்னாள் அமைச்சா் றாஜிதவை கைது செய்வதற்காக பொலிஸ் புலனாய்வு பிாிவு தொடா்ச்சி யாக தேடுதல் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில், இன்று றாஜிதவின் கொழும்பு வீட்டுக்குள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினா் நுழைந்து தேடுதல் நடாத்தியுள்ளனா். 

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பாக போலியான விடயங்களை முன்வைத்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து, சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய அவரை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் மாலை பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 1.15 மணியளவில் கொழும்பிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர். சுமார் 20 நிமிடங்களின் பின்னர் 

அவர்கள் அங்கிருந்து வௌியேறிச் சென்றதுடன், அந்த சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன வீட்டில் இருக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீள அழைக்குமாறு 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் அவரது சட்டத்தரணிகளினால் இன்று மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு எவ்வித காரணங்களும் இன்றி 

சட்டத்தரணிகளினால் மீளப்பெறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு