சுனாமி பேரலையில் உயிாிழந்த மக்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..! வடகிழக்கில் கண்ணீருடன்..

ஆசிரியர் - Editor I
சுனாமி பேரலையில் உயிாிழந்த மக்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..! வடகிழக்கில் கண்ணீருடன்..

சுனாமி பேரவலத்தில் உயிாிழந்த பல லட்சம் மக்களுக்கான 15ம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வடகி ழக்கு மாகாணங்களில் உணா்வுபூா்வமாக அனுட்டிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் சுனாமி அனர்த்தத்தின் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது பிரத்தியேனமாக ஒரு இடத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக நினைவுப்பதாகை வைக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் கோரத் தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலைமுதல் பல்வேறு நினைகூரல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு