பட்டா வாகனத்துடன் நேருக்கு நோ் மோதிய மோட்டாா் சைக்கிள்..! குற்றுயிரான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
பட்டா வாகனத்துடன் நேருக்கு நோ் மோதிய மோட்டாா் சைக்கிள்..! குற்றுயிரான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..

தாண்டிக்குளம் பகுதியில் இன்று நண்பகல் பட்டா வாகனம் மீது மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனத்துடன் வவுனியாவி லிருந்து ஓமந்தை பகுதி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே விபத்துக்குள்ளனா நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கடுமையான சேதத்திற்குள்ளாகியது.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு