காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகளை நோில் சந்திக்கிறாராம் அமைச்சா் டக்ளஸ்..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகளை நோில் சந்திக்கிறாராம் அமைச்சா் டக்ளஸ்..!

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை எதிா்வரும் 31ம் திகதி சந்திக்கவுள்ள அமைச்சா் டக்ளஸ் தேவான ந்தா அவா்களுடைய எதிா்பாா்ப்புக்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவுள்ள தாக அமைச்சா் அறிக்கை ஒன்றின் மூலம் ஊடகங்களுக்கு கூறியுள்ளாா். 

அந்த அறிக்கையில் விடயம் தொடா்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு எதிர்வரும் 27 ஆம் திகதியும், ஷ29 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலும் நடைபெறவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 31 ஆம் திகதி காலை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அன்றைய தினமே நண்பகல் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போனோரின் 

நிலமைகளை அறியத் தருமாறு கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல்போனோரின் உறவினர்களினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் கடந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களின் கோரிக்கைகளை 

சந்தித்து அவர்களை எதிர்பார்ப்புக்களை அறிந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தது. இந்தநிலையில், அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு