SuperTopAds

வடகிழக்கின் 8 மாவட்ட வீரா்கள் பங்குகொள்ளும் பாாிய பூப்பந்தாட்ட போட்டித் தொடா்..! எமது இளைஞா்களின் திறனை வெளிப்படுத்தும் முயற்சி..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கின் 8 மாவட்ட வீரா்கள் பங்குகொள்ளும் பாாிய பூப்பந்தாட்ட போட்டித் தொடா்..! எமது இளைஞா்களின் திறனை வெளிப்படுத்தும் முயற்சி..

வடகிழக்கின் 8 மாவட்ட வீரா்களை உள்ளடக்கிய பூப்பந்தாட்ட லீக் ஒன்றை உருவாக்கும் நோக்கில் லேடன் அமைப் பும் புலம்பெயா் தமிழா் ஒருவாினதும் நிதி பங்களிப்புடன் பூப்பந்தாட்ட போட்டி எதிா்வரும் 28ம், 29ம் திகதிகளில் யா ழ்.அாியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. 

8 மாவட்ட அணிகள் பங்குபற்றும் பூப்பந்தாட்ட சுற்று தொடர் தொடர்பில் லேடன் பூப்பந்தாட்ட யாழ் மாவட்ட நிர்வாகக் குழுவினர் யாழ்.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று மாலை நடாத்தியிருந்தனர். இதன் போது அவர்கள் தெரிவித்ததாவது. 

வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களுக்கும் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளின் ஊடாக இத் தொடருக்கான அழைப்பு விடப்பட்டபோதும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட அணிகள் மட்டும் பங்குபற்ற வில்லை. 

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஏனைய 6 மாவட்ட அணிகளுடன் மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடதக்கது.இரண்டு தினங்கள் நடைபெறவுள்ள இச் சுற்றுத் தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கும் சிறந்த திறமைகளைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கும் 

பணப்பரிசில்கள் உட்பட விருதுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.இதற்கமைய 1ம் இடம் பெறும் அணிக்கு 50000 ஆயிரம் ரூபாவும் 2ம் இடம்பெறும் அணிக்கு 30000 ஆயிரம் ரூபாவும் 3ம் இடம் பெறும் அணிக்கு 20000 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. 

மேலும் பல தனிநபர் விருதுகள் மற்றும் வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.இதே வேளையில்; கிழக்கு மாகாணத்தின் இரு மாவட்டங்களிலும் பல பூப்பந்தாட்ட வீரர்கள் இருந்தும் மேற்படி தொடரில் பங்குபற்றாது தவிர்ப்பதற்கான காரணம் தெரியவில்லை. 

ஆனால் திட்டமிட்ட ஏதும் செயற்பாடுகள் இருக்கிறதா என்பது கேள்வியாக உள்ளது. இருந்தாலும் உண்மையில் அவர்களும் நிச்சயமாக பங்கு பற்றியிருக்க வேண்டும்.வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் பூப்பந்தாட்ட தொடர்கள் நடைபெறுவது மிகவும் குறைவாக காணப்படுகிறது. 

 இவ்வாறான நிலைமைகளில் நடைபெறுகின்ற ஒரு சில இது போன்ற தொடர்களிலும் பங்குபற்றாமல் இருப்பதால் அந்த மாவட்ட வீரர்களுக்கே பாதிப்பு ஏற்படப் போகிறது.ஆகவே பல திறமையான வீரர்கள் இருந்தும் சந்தர்ப்பங்களுக்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு தவித்து வருகின்றனர். 

ஆகவே இது போன்ற தொடர்கள் இடம்பெறுவது எமது வீரர்களுக்கு மிகவும் பயனுடையதாகவே அமைகின்றது. உண்மையில் இது போன்ற தொடர்கள் எமது வீரர்கள் தேசிய ரீதியாக கால் பதிப்பதற்கு உந்துசக்தியாக அமையும்.ஆகையினால் இனி வரும் காலங்களில் இது போன்று நடக்கின்ற அனைத்து 

தொடர்களிலும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அணிகளது வீரர்களும் பங்குபற்ற வேண்டியது மிக மிக அவசியமானது.அவ்வாறானதொரு நிலைமைகளை ஏற்படுத்துவதனூடாக எமது வீரர்களின் திறமைகளிற்கேற்ப சந்தர்ப்பங்கள், 

வாய்ப்புக்களை உருவாக்க முடியுமென்று கருதுகின்றோம். ஆகவே இங்குள்ள அணிகள் இவ்வாறான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தங்களது திறமைகளை வெள்pப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமென அவர்கள் மேலும் தெரிவித்தனர்.