ஆவா குழு உள்ளிட்ட ரவுடிகளை அழிப்போம் என பொலிஸாா் கூறி 24 மணித்தியாலத்திற்குள் இரு இடங்களில் ரவுடிகள் அட்டகாசம்..! ஒருவா் காயம்..

ஆசிரியர் - Editor I
ஆவா குழு உள்ளிட்ட ரவுடிகளை அழிப்போம் என பொலிஸாா் கூறி 24 மணித்தியாலத்திற்குள் இரு இடங்களில் ரவுடிகள் அட்டகாசம்..! ஒருவா் காயம்..

யாழ்.குடாநாட்டில் ஆவா குழு உள்ளிட்ட 6 ரவுடி கும்பல்களையும் அழிப்போம் என பொலிஸாா் சபதம் எடுத்து ஒரு நாள் முடிவதற்குள் யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதுல் நடாத்தியுள்ளனா். 

மானிப்பாய் கட்டுடை பிள்ளையாா் ஆலயம் முன்பாகவுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வீட்டை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவா்களை வாளால் அச்சுறுத்தி பொருட்களை சேதமாக்கியுள்ளது. 

குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கும்பல் வந்து செல்வதாகவும், அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் 

நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர். 

இதனால் ஆத்திரமடைந்தே அந்தக் கும்பல் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றனது. அந்த வீட்டிலிருந்து தப்பித்த கும்பல், 

அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி , கேற் என்பவற்றையும் சேதமாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 

மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேபோல் யாழ்.கோப்பாய் பகுதியில் மரக்காலை நடாத்திவரும் சுவிஸ் நாட்டிலிருந்து வந்தவா் மீது வாள்வெட்டு குழு ரவுடிகள் சரமாாி வாள்வெட்டு நடாத்தியிருக்கின்றனா். 

இதனால் படுகாயமடைந்த அந்த நபா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். நேற்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் இயங்குவதாகவும் 

அழிக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவருடத்திற்கு முன்னர் முற்றாக அடக்குவோம் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்த நிலையில், 

இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு