SuperTopAds

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்..! கோட்டா அரசு தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்..! கோட்டா அரசு தீா்மானம்..

இலங்கையின் 72வது சுதந்திர தினம் மாசி மாதம் 4ம் திகதி சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்ப டவுள்ள நிலையில், சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் தி ட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. 

சுதந்­திர தின நிகழ்வு தொடர்­பாக அரச நிர்­வாக அமைச்சில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­ றது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி 

மரம் நடும் திட்டத்தையும் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.அத்­துடன் சுதந்­திர தினத்தில் இடம்­பெற ஏற்­பா­டாகி இருக்கும் கலை நிகழ்ச்­சிகள் மற்றும் வேறு நிகழ்­வு­களை ஒத்­திகை பார்க்­ கும்­போது, மக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டா­த­வ­கையில் 

மேற்­கொள்­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 2016 ஆம் ஆண்டில் காலி முகத்திடலில் நடந்த 68 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இலங்கையில் முதல் தட­வை­யாகத் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.