சஜித் பிறேமதாஸ கைது செய்யப்படும் அபாயம்..! ஜனாதிபதி கோட்டாவிடம் சரணடைந்தார், முக்கிய ஆவணங்கள் மஹிந்தவிடம்..
ஜனாதிபதி தேர்தலில் 27 கோடி ரூபாய் கடன்பட்டு அதனை மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக சஜித் பிறேமதாஸ கூறிய கருத்தினால் பெரும் சர்ச்சை உருவாகி தென்னிலங்கையில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பதுடன்,
ஜனாதிபதியானால் மக்கள் பணத்தை கொள்ளையடித்து கடனை செலுத்தலாம் என நினைத்தா கடன் வாங்கினார் என கேள்விகள் எழுந்துள்ளதுடன், சஜித்தின் மனைவி பெயரில் உள்ள சிகை அலங்கார நிலையம் தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் 27 கோடி ரூபாய் கடன்பட்டிருப்பதாக சஜித் பிறேமதாஸ கூறியிருந்தார். இந்நிலையில் அவ்வளவு பணம் எந்த நம்பிக்கையில் வாங்கினார். என கேள்வி எழுந்துள்ளதுடன், ஜனாதிபதியானால்
மக்கள் பணத்தில் அதனை செலுத்தலாம் என நினைத்து வாங்கினாரா? என கேள்விகள் எழுந்துள்ளதுடன், சஜித் பிறேமதாஸவின் மனைவியினால் நடாத்தப்படும் சிகை அலங்கார நிலையம் தொடர்பாகவும் அதனை
கொள்வனவு செய்வதற்காக 35 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது எனவும் கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் ஐக்கியதேசிய கட்சியின் ஆதரவாளர்களே இந்த விடயத்தை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சஜித் பிறேமதாஸவுக்கு கடன் வழங்கிய நபர் யார்? என்பது தொடர்பாகவும் அவர் வெளிப்படுத்த தயங்குவதாக கட்சி ஆதரவாளர்களே கூறியுள்ளனர். இந்நிலையில் சஜித் பிறேமதாஸ பதவி வகித்த வீடமைப்பு அமைச்சில்
பலகோடி ரூபாய் மோசடி இடம்பெற்றதாகவும் அது தொடர்பான பெருமளவு ஆவணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சஜித் பிறேமதாஸ கைது செய்யப்படலாம்.
என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் கூறியிருக்கின்றார். இந்நிலையில் தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக சஜித் கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.