ஜனாதிபதியிடமிருந்து அதிரடி உத்தரவு..! உதவி பொருட்களுடன் பறக்கும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியிடமிருந்து அதிரடி உத்தரவு..! உதவி பொருட்களுடன் பறக்கும் அதிகாரிகள்..

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு ம் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிப் பொருட்களை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். 

வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு 

விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நலன்பேணல் நடவடிக்கைகளை துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்லுமாறு 

ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்த நிவாரண நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. அனர்த்தத்தின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் மற்றும் அனர்த்தத்தின் பின்னர் 

முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அதில் உள்ளடங்குகின்றன.இந்த இரண்டு செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலக பிரிவுகளில் 10 பிரிவுகள் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள அதேவேளை, டிசம்பர் 20ஆம் திகதி முதல் இன்று வரை 1561 குடும்பங்களைச் சேர்ந்த 5181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2923 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவு பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்கள் சிலவற்றிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று விஜயம் செய்து மக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு