உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்..! சிக்கலில் மாட்டப்போகும் ஹக்கீம், றிஷாட்..
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவு முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாட் ஆகியோர் மீது விசாரணை நடாத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய தயாராக இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிடர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற தீவிரவாத தாக்குதல் பற்றிய வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியானகே முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதில் முன்னிலையாகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ
மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை எதிர்வரும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேப்போல் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் மற்றும் ஹக்கீம்
ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.ஐ.டியினர் தயாராக இருப்பதை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக மன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டது.