சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவாிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிா்ந்துபோன பொலிஸாா்..! 7 பொலிஸ் நிலையங்களில் தேடப்படுபவராம்..
சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்ட நபா் ஒருவாிடம் பொலிஸாா் நடாத்திய விசாரணை யில் பொலிஸாருக்கே அதிா்ச்சியளிக்கும் பல குற்றங்கள் தொடா்பான தகவல்கள் கிடைத்திருப் பதுடன், கைது செய்யப்பட்டவன் பாாிய குற்றவாளி என பொலிஸாா் கண்டுபிடித்துள்ளனா்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரை நீர்கொழும்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின்
ஆலோசனைக்கு அமைய 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நீர்கொழும்பு நகரில், சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவர்
தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி செயற்பட்டுள்ள நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஹொரனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரை
இவ்வாறு கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரவுட்லரின் ஆலோசனைக்கு அமைய அவர் 48 மணி நேரம் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளதுடன், திருட்டு, வீடுடைப்பு, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றங்கள் பலவற்றுடன் அவருக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.