ஆயுதங்களுடன் இராணுவம் நாடு முழுவதும் பாதுகாப்பு..! அதிகாரம் வழங்கும் உத்தரவை நீடித்து ஜனாதிபதி மீண்டும் உத்தரவு..
ஆயுதங்களுடன் முப்படையினரும் நாட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட அதிகாரம் வழங்கும் வா்த்தமானி அறிவித்தலை நீடித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளாா்.
இதற்கான வா்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியிருக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல்
இன்று வௌியிடப்பட்டுள்ளது.ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு
கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிப்பதற்காக 25 நிர்வாக மாவட்டத்தினை உள்ளடக்கும் வகையில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை
கடமையில் ஈடுபடுத்துவதுவதற்கு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.