ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் மணல் கொள்ளையா்களுக்கு பூரண சுதந்திரம்..! இன்று காலை தொடக்கம் போராட்டம் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் மணல் கொள்ளையா்களுக்கு பூரண சுதந்திரம்..! இன்று காலை தொடக்கம் போராட்டம் ஆரம்பம்..

ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் மணல் அகழ்வு நடவடிக்கை தீவிரமடைந்திருக்கும் நிலையில் சட்டத்தை மீறிய மணல் அகழ்வை நிறுத்தக்கோாி மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப் போகும் பாதிப்பைத் தடுப்போம் என வலியுறுத்தும் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் வடமராட்சி கிழக்கில் திரண்ட 50இற்கும் மேற்பட்டோர், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளப்படுத்தினர்.

அத்துடன், மணல் வளம் சூறையாடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரும் மனு ஒன்று இன்று முற்பகல் 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கையளிக்கப்பட்டது. அந்த மனுவை பிரதேச செயலர் சார்பில் அவரது உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது. 

தொடர்ந்து பளை, கொடிகாமம் தீவகம் – மண்கும்பான் பகுதிகளிலும் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று 

ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு