மோட்டாா் சைக்கிள் மீது மோதிய பேருந்து..! மோட்டாா் சைக்கிளில் பயணித்தவா் பலி, பேருந்தை அடித்து நொருக்கிய மக்கள்..
மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது தனியாா் பயணிகள் பேருந்து மோதியதில் மோட்டாா் சை க்கிளில் பயணித்தவா் உயிாிழந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் பேருந்தை அடித்து நொருக்கியிய சம்பவம் மட்டக்களப்பு- கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவ து, அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்த பேருந்தும் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் இவ்வாறு மோதியுள்ளன.
முன்னால் சென்ற கார் ஒன்றை மோட்டார் சைக்கிளில் சென்றவர் முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்துள்ளது.இந்த விபத்தையடுத்து அங்கு கூடியவர்கள் விபத்துக்கு உள்ளான
பேருந்து மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த விசாரணையை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.