வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கில் மணல் கள்ளா்களை அடித்து விரட்டிய மக்கள்..!
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவா்களை அப்பகுதி பொதுமக்கள் இணைந்து விரட்டியடித்திருக்கின்றனா்.
பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி அளவுகடந்த நிலையில் கோபமடைந்த மக்கள் இன்று பிற்ப கல் மணல் அகழப்படும் பகுதிக்குள் நுழைந்து மணல் கொள்ளையா்களை
விரட்டியாடித்துள்ளனா். அதிகளவு டிப்பர்களில் மணல் கடத்தல்கள் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்று வந்தது.பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்
குடத்தனை மக்கள் இன்று அங்கு திரண்டனர். மணல் அகழ்வில் ஈடுபட்டு டிப்பர் வாகனங்களில் கடத்த முற்பட்டவர்களை மக்கள் விரட்டியடித்தனர்.
ஊர் மக்கள்மணல் கடத்தல்காரர் சவல்களால் மணல் அகழ்வில் ஈடுபட்டபடியால் அங்கிருந்து டிப்பர்களில் தப்பித்தனர் .மணல் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பித்த நிலையில்
ஊர்மக்கள் மணல் அகழ்வில் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்பி அங்கிருந்து சென்றனர். இதேவேளை, வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலைத் தடுப்பதற்காக இரவு பகல் என
சுழற்சிமுறையில் விழிப்புக்குழுக்களாகச் செயற்பட மக்கள் தீர்மானித்துள்ளனர்.