சிறைச்சாலை சுவாில் சங்கமித்தையின் ஓவியத்தை நீங்கள் வரைந்தால் மறுசுவாில் நாங்கள் சங்கிலியனின் ஓவியத்தை வரைவோம்..!
யாழ்.சிறைச்சாலையின் ஒரு சுவாில் சங்கமித்தையின் ஓவியத்தை வரைந்தால் மறுபக்க சுவாில் சங்கிலிய மன்னனின் ஓவியத்தை நாங்கள் வரைவோம். அதனை எவா் தடுப்பாா் என்பதையும் நாங்களே பாா்த்துக் கொள்வோம்.
மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின் றாா். யாழ்ப்பாணம் சிறைச்சாலை உதவி அத்தியட்சகரிடம் கோரியுள்ளார்.எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்தால்
சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அனுமதி கேட்கப்படும் என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் பதிலளித்தார்.யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் முகப்புச் சுவர் ஒன்றில் பௌத்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில்
சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கியதைச் சித்தரித்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்று புத்தர் சிலையை திறந்து வைக்கவுள்ளதாக தகவல் அறிந்த பொது மக்களும் மக்கள் பிரதிநிதிகளும்
அந்த இடத்தில் கூடி வெளியிட்ட எதிர்ப்பால் அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இதன்போதே யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் முகப்பு சுவர் ஒன்றில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சங்கிலிய மன்னனின் ஓவியத்தை
வரைய அனுமதிக்குமாறு எம்.கே.சிவாஜிலிங்கம் கோரினார்.