சம்பிக்க கைது செய்யப்பட்ட முறைமை சட்டவிரோதமானது..! சபாநாயகர் அதிரடி..
சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட முறை சட்டவிரோதமானது. என சபாநாயகர் அலுவ லகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. .
ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைது முறை குறித்து இன்று பகல் முறைப்பாடு ஒன்று சபாநாயகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள சபாநாயகர் அலுவலகம், முன்னாள் அமைச்சரின் கைதானது நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கியக் கட்சியின் ஊடக சந்திப்புகளிலும் முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் கைதுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
அரச பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைகள் இதனூடாக ஆரம்பமாகிவிட்டது என்ற செய்தியை புதிய அரசாங்கம் தந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்
பொதுச் செயலாளரான அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.இதேவேளை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் கைதானது முற்றிலும்
அரசியல் பழிவாங்கல்தான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.