தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவிய சர்வதேசம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன கூறப்போகிறது..?
தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க உதவிய சர்வதேசம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை யை தீர்ப்பதற்கு உதவ வேண்டும். இல்லையேல் இல்லையேல் தமிழ் மக்களை ஏமாற்றியதற்கான பொறுப்பு அவர்களையும் சேரும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்மந்தன் கூறியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பயணம் நிண்டது. அததை எல்லோராலும் பெற்றுக் கொடுக்க முடியாது. குறிப்பாக கற்பனையில் வாழ்கிறவர்களாலும், தத்தளிக்கிறவர்களாலும் பெற்றுக் கொடுக்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13ம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன், அர்த்தபூர்வமான அதிகர பகிர்வு இடம் பெற செய்வேன் என கூறியிருந்தார். அது நடக்கவில்லை, போர் நிறைவடைந்த பின்னர் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
என்ற ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு இந்த நாட்டில் இனங்கள் சமத்துவமாக வாழவில்லை. என்பதை சுட்டிக்காட்டி இந்த நாட்டில் அதியுச்ச அதிகார பகிர்வு வேண்டும் என பரிந்துரை செய்தது.
ஐ.நா மனித உரிமை ஆணையக தீர்மானத்தில் அதியுச்ச அதிகார பகிர்வின் அடிப்படையில் தீர்வுக்கு அரசாங்கம் இணங்கியிருக்கி ன்றது. அரசுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்குமிடையிலான பேச்சுக்களின்போது உதவிய நாடுகளுக்கும்,
சர்வதேச அமைப்புக்க ளுக்கும் அதிகார பகிர்வு ஊடாக நாட்டில் சகல மக்களும் சமத்துவமாக வாழும் நிலை உருவாக்கப்படும் என அரசாங்கம் உத்தரவா தம் வழங்கியிருக்கின்றது. அதற்கு மேல் இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் சமஸ்டி குறித்து பேசியுள்ளனர்,
அதியுச்ச அதிகார பகிர்வு குறித்து பேசியுள்ளார்கள். அது நிறைவேற்றப்படவேண்டும். அது அவர்களுடைய கடமை. அதனை பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வாறு செயற்படுவதென்பது எமக்கு தெரியும்.
இதனை எல்லோரும் செய்ய முடியாது. குறிப்பாக கற்பனையில் வாழ்கிறவர்களும், தத்தளித்துக் கொண்டிருப்பவர்களும் செய்ய முடியாது. புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும்,
ஜனாதிபதியுடன் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய பிரதமரும் தமிழ் மக்கள் இலங்கையில் சம அந்தத்துடன் கௌர வமாக வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அது இந்தியாவின் விருப்பம். என தெளிவாக கூறியிருக்கின்றனர்.
அது செய்யப்ப டவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு உதவும்போது சர்வதேசம் விசேடமாக இந்தியாவுக்கு இலங்கை வழங்கிய நிபந்தனை புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்பதே,
அந்த நிபந்தனையிலிருந்து இப்போது மாற பார்க்கிறார்கள். அதனை சர்வதேசம் விசேடமாக இந்தியா பார்த்துக் கொண்டிருக்க கூடாது. பார்த்தக் கொண்டிருந்தால் தமிழ் ஏமாற்றப்பட்டமைப்பான பொறுப்பு அவர்களுக்கும் உண்டு.
நாம் எவருடனும் மோத விரும்ப வில்லை. எவரையும் எதிர்க்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய தலைவர் கூறியதுபோல் சிங்கள மக்களின் அதிக விருப்பை பெறும் தலைவர்களுடன் நாம் நல்லுறவை கொண்டிருக்கவேண்டும்
என்பதற்கமைய நாங்கள் நடந்து கொள்ள விரும்புகிறோம். அதற்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாரில்லை என்றார்.