கிராமங்களின் அபிவிருத்திக்கு தலா 5 மில்லியன்..! அரசாங்கத்தின் புதிய திட்டம்..

ஆசிரியர் - Editor I
கிராமங்களின் அபிவிருத்திக்கு தலா 5 மில்லியன்..! அரசாங்கத்தின் புதிய திட்டம்..

இலங்கையில் உள்ள சகல கிராமசேவகர் பிரிவுகளுக்கும் தலா 5 மில்லியன் ரூபாய் பணம் அபிவிருத்திக்காக வழங்கப்படவுள்ளது. 

அதில் முதல் கட்டமாக 2 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு பிரதேச செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கிராம அலுவலர் பிரிவில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை அலுவலர் 

மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு