மணல் கொள்ளையர்களை கைது செய்..! வள சுரண்டலை நிறுத்து, யாழ்.நகரில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மணல் கொள்ளையர்களை கைது செய்..! வள சுரண்டலை நிறுத்து, யாழ்.நகரில் போராட்டம்..

வடக்கு மாகாணத்தில் தொடரும் எல்லை மீறிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும், குற்றவாளிகளை கைது செய்யகோரியும் யாழ்.நகரில் இன்று காலை பாரிய மக்கள் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருக்கின்றது.

கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ததன் பின்னர் வடமாகாணத்தில் தொ டர்ச்சியாக மணல், கிரவல் உள்ளிட்டவை மிதமிஞ்சி சட்டவிரோதமாக வருகிறது. இதனை தடுத்து நிறுத்துமாறு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்காத நிலையே தொடர்ந்து வருகிறது.சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இதனை கண்டித்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரியும் யாழ்ப்பாணம் மாநகரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் உள்பட பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இயற்கையை நீ அழித்தாலே, இயற்கையால் நீ அழிவாய், சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்து, மணல் அகழ்வு மற்றும் வழித்தட அனுமதியை அவசியமாக்கு, மணல் அள்ளும் உரிமையை அரசியல்வாதிக்கு வழங்காதே, இந்த மண் எங்களின் சொந்தமண், 

எங்களை மீறி யார் வந்தவன், இனிக் கடல் நீர்தான் வரும் உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு