தமிழீழ விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட காடுகளை தேடி.. தேடி.. அழிக்க காரணம் என்ன..? விழி பிதுங்கிய வனவள திணைக்களம்..
தமிழீழ விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்கு காடுகளில் கண்மூடித்தனமாக தேக்கு மரங்கள் வெட்டப்படும் நிலையில், வனவள திணைக்களம் பூரணமான ஒத்துழைப்பை அதற்கு வழங்குவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றய தினம் அதன் தலைவர் தர்ம்பாலா தலமையில் இடம்பெற்றபோதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மேற்படி குற்றச் சாட்டினை முன்வைத்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,வனவளத் திணைக்களம் வவெனியாவில் மேற்கொண்ட செலவு விபரங்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்ட மரங்களை முற்றி பலகை அரிய பயன்படுத்தாது
இளம் பராயத்திலேயே தறித்து கட்டைகளிற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக தேக்கம் மரங்கள் தறிக்கப்படுகின்றன. இதேபோன்று பெரும் மரங்கள் இங்கிருந்து தறித்து தெற்கே எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பலகையாக எமக்கே விற்கப்படுகின்றது.
இவ்வாறு அழிக்கப்படுவதற்கு வனவளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்துரைக்கையில்,இவை மட்டுமன்றி இங்கிருந்து பாலை, முதிரை வகையிலான பாரிய மரங்களும் தறித்தெடுத்து கொண்டு செல்லப்படுகின்றது.
எவ்வாறு அனுமதியளிக்கின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். இவற்றிற்கு பதிலளித்த வனவளத் திணைக்கள அதிகாரி பாலை , முதிரை மரம் தறிக்க அனுமதி பெறப்படவில்லை. இதேநேரம் இந்த ஆண்டு வவுனியா மாவட்டத்திலே 42 கெக்டேயர் காடு வெட்டுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனப் பதிலளித்தார்.