மணல் கொள்ளையை எதிர்த்து மக்கள் போராட்டம்..! மக்கள் மற்றும் ஊடகங்களிடம் வீரம் காட்டிய பொலிஸார்..
கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று கிளாலி மற்றும் அரத்திநகர் அல்லிப்பளை பகுதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளை நடவடிக்கையி னை கண்டித்து பளை பகுதியில் நேற்று காலை மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர்.
கோட்டபாய ராஜபக்ஷ ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் வடமாகாணத்தில் தொ டர்ச்சியாக மணல், கிரவல், கல் மிதமிஞ்சி கொள்ளையிடப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கேட்டுவருகின்றனர்.
எனினும் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்காத நிலையே தொடர்ந்து வருகிறது. குறித்த மண் அகழ்வினை தடுக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக் குகொலை அச்சுறுத்தலும் விடுக்கப்படிகிறது.
இதனை கண்டித்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரியும் நேற்று காலை 10 மணி யளவில் பளை நகரில் கூடிய மக்கள்,யாழ்ப்பணம்- கண்டி வீதியை மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ஏ9 வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் போரட்டகளத்தில் மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டுது.அதன் பின்பு பளைசம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலீசார்
மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மண் அகழ்வினை தடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வாதக கூறி மக்களுடன் கலநந்துரையாடினார் கலந்துரையாடும் போது நாம் பளை பகுதிகளில் மண் அகழ்வை தடுப்பதற்கு
கடும் முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம் பொலீஸ் நிலையத்தில் பல டிப்பர் வாகனங்களை மண்ணுடன் பிடித்து வைத்துள்ளோம் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் பளை பகுதியில் இடம்பெறுகின்ற
மண் அகழ்வை தடுப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை முன் எடுக்கின்றோம் எங்களுக்கு ஊர்மக்கள் ஆதரவுதாருங்கள் நாம் இருவரும் சேர்ந்தே சட்ட விரோத மண் அகழ்வை நிறுத்துவோம் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர்களுக்கு
எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.பளை பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து ம் வாழ்மக்கள் போராட்டத்தை கைவிட்டதுடன் பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலாளர் பரமோதயன் ஜெயராணிக்கு மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
மண் அகழ்வுகள் மீண்டும் இடம் பெறும் பட்சத்தில் நாம் மீண்டும் போராடுவோம் என்று மக்கள் கூறினார்.இந்த போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.