காணாமல்போனவா்கள் உயிருடன் இல்லை..! அடித்து கூறிய ஜனாதிபதி, உறவுகள் மரண சான்றிதழ் பெறுமாறும் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
காணாமல்போனவா்கள் உயிருடன் இல்லை..! அடித்து கூறிய ஜனாதிபதி, உறவுகள் மரண சான்றிதழ் பெறுமாறும் கோாிக்கை..

போா் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உயிாிழந்துவிட்டாா்கள் என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய அவா்களுக்கான இறப்பு சான்றிதழை பெறுபவதே பொருத்தமானதாக இருக்கும் என கூறியுள்ளாா். 

ஊடக ஆசிாியா்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

ஒருசமயம் முகமாலையில் 120 சிப்பாய்களின் சடலங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை அழுகிய நிலையில் இருந்தன. இரு தரப்பிலும் இந்த நிலை இருந்தது.

போர்க்காலத்தில் வடக்கில் மாத்திரமன்றி தென் பகுதியிலும் பலர் காணாமல்போயிருந்தார்கள். எனவே, போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்.

எனினும், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னால் உணர முடிகின்றது. இதனாலேயே காணாமல்போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனவே, காணாமல்போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும்- என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு