ஒரு லட்சம் பெறுமதியான பால் பொருட்கள் நீதிமன்ற உத்தரவையடுத்து அழிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
ஒரு லட்சம் பெறுமதியான பால் பொருட்கள் நீதிமன்ற உத்தரவையடுத்து அழிக்கப்பட்டது..!

இலகுவில் பழுதடையகூடிய வகையில் உரிய களஞ்சிய வசதி இல்லாமல் கொண்டு செல் லப்பட்ட ஒரு லட்சம் பெறுமதியான பால் பொருட்கள் ஊர்காவற்றுயை நீதிவான் உத்தரவி ன் பெயரில் அழிக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகர் பகுதியில் உரிய வெப்ப நிலையின்றி கொண்டுவரப்பட்ட பால் உற்பத்தி பொருள்களான தயிர், யோக்கட், சீஸ் மற்றும் யோக்கட் குடிபானம் ஆகியவற்றை அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் கைப்பற்றி இருந்தார்.

அந்த உற்பத்தி பொருள்கள் 3 தொடக்கம் 4’c இல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால் பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனை செய்யும் போது , அவை 14’c க்கும் அதிகமான வெப்ப நிலையில் களஞ்சியப்படுத்தி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.

இது குறித்த கடந்த 12ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது எதிராளி குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து 15 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்த நீதிமன்றம், 

கைப்பற்றப்பட்ட பால் உற்பத்தி பொருள்களை அழிக்குமாறு உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு