SuperTopAds

வடமாகாணத்தில் பராமரிப்பில்லாமல் உள்ள தனியார் காணிகள் பிரதேசசபையின் ஆழுகைக்குள் போகிறது..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் பராமரிப்பில்லாமல் உள்ள தனியார் காணிகள் பிரதேசசபையின் ஆழுகைக்குள் போகிறது..!

வடக்கு மாகாணத்தில் பராமரிக்கப்படாமல் உள்ள மக்களின் காணிகளை பிரதேசசபைகளி ன் ஆழுகைக்குள் கொண்டுவருவதற்கு வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடு த்திருப்பதுடன், உரிமையாளருக்கு தண்டமும் விதிக்கப்படவுள்ளது. 

இதன் முதற்கட்டமாக இன்று வலி, வடக்கு பிரதேச சபை மற்றும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்கு உட்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சிவப்பு எச்சிரிக்கை 

பாதாதைகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவை காட்சிப்படுத்தப்பட்ட 14 நாட்களுக்குள் பாவனையற்ற நிலையில் காணிகளை வைத்திருக்கும் காணி உரிமையாளர்கள் அவற்றை துப்பரவு செய்யவேண்டும்.

அவ்வாறு துப்பரவு செய்யாதவிடத்து குறித்த காணிகளை பிரதேச சபை முன்வந்து துப்பரவுப் பணியினை மேற்கொள்ளும் எனவும் இதன்பொருட்டு காணியினை உரிமை கோருபவர்களிடம் துப்பரவு செய்ததற்கான பணமும் அதனுடன் இணைந்து 

தண்டப்பணமும் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.