நிஷாந்த சில்வா விசாரணை நடத்திய படுகொலைகள். ஆட்கடத்தல்கள் குறித்த சகல ஆவணங்களும் ஐ.நாவிடம் சென்றது எப்படி ..? கலக்கத்தில் அரசு..!
இலங்கையில் நடந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு பிாிவின் விசாரணை அறிக்கை ஐ.நா மனித உாிமை ஆணைக்குழுவுக்கு நிஷாந்த சில்வா அனுப்பியிருப்பதாக சிங்கள ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இந்த இரகசிய அறிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழுவில் தான் கண்டதாக முன்னாள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கம்
அது தொடர்பில் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பான இரகசிய ஆவணம் முதலில் ஜெனீவாவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்பான 100 இரகசிய ஆவணங்கள் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகாவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.