என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்..! வறுமையினால் தொழில் தேடி ஓமன் நாட்டுக்கு சென்ற முல்லைத்தீவு பெண் கண்ணீருடன் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்..! வறுமையினால் தொழில் தேடி ஓமன் நாட்டுக்கு சென்ற முல்லைத்தீவு பெண் கண்ணீருடன் கோாிக்கை..

குடும்ப வறுமை காரணமாக வேலைவாய்ப்பு தேடி முல்லைத்தீவிலிருந்து ஓமன் நாட்டுக்கு சென்ற குடும்ப பெண் அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தன்னை மீட்டு இலங்கைக்கு அழைக்குமாறு முல்லை த்தீவில் உள்ள உறவினா்களிடம் அவா் கண்ணீா்மல்க கேட்டுள்ளாா். 

முல்லைத்தீவு அளம்பிலை சேர்ந்த செல்வகுமார் பிரியதர்சினி வயது 36 என்னும் குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் தனது குடும்பத்தின் வறுமையை போக்க கடந்த 04-09-2019ம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் என தன்னை அடையாளப்படுத்திய நசீர் என்னும் நபர் ஒருவர் தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்று ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்ததாகவும், 

அங்கு தான் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழிசெய்யுமாறும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது 

குறித்த பெண் சட்டவிரோத ஆட்கடத்தல் நபர்களினால் ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு