சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர். 

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து 

அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள்  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.

இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, 

பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு