வடகிழக்கு மாகாண பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு..! தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாண பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு..! தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்..

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும்,

பொலிஸ் என குறிப்பிடாமல் தமிழ் மொழியில் காவ ல்துறை என பொலிஸார் அழைக்கப்படவேண்டும் எ னவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் அரசகரும மொழிகள் ஆணைக்குழு விடுத்த பரிந்துரையின் அடிப்படையிலான நடவடிக்கை இது என தெரிவிக்கப்படுகிறது.

செப்ரெம்பர் 6ம் திகதி அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிற்கு இதற்கான பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. 

இதன் நகல் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்த புதிய உத்தரவு இடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு, கிழக்கில் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழே, பெயர்ப்பலகைகளில் முன்னுரிமை 

பெற்றிருக்க வேண்டுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. பொலிஸ் என குறிப்பிடாமல் காவல்த்துறை என 

தமிழில் குறிப்பிடும்படி அரசகரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதன்படி, அறிவித்தல் பலகைகளில் இனிமேல் குறிப்பிடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு