தபால் மூல வாக்களிப்பு: மீண்டும் ஒரு சந்தர்ப்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 இற்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு தினங்கள் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளன.
2018 உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் 17159 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 113 நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்றிருந்தது.
இதன்போது வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி மாவட்ட உதவித்தேர்தல் அலுவலகத்திற்கு சமூகமளித்து வாக்களிக்க முடியும் என மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளர்.