SuperTopAds

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்- வெளிவிவகார அமைச்சு அறிக்கை!

ஆசிரியர் - Admin
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்- வெளிவிவகார அமைச்சு அறிக்கை!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் நவம்பர் 25 ம் திகதி இடம்பெற்ற குற்றச்செயல் குறித்து தீவிர கவனம் செலுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், விசாரணைகளை மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளிற்கு ஏற்ப சுமூகமான முறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சி விரைவில் சுவிட்சர்லாந்தின் அதிகாரிகளை சந்தித்து விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார்.

இராஜதந்திர உறவுகள் குறித்த வியன்னா பிரகடனத்தின் கீழ் தனக்குள்ள கடப்பாட்டிற்கான அர்ப்பணிப்பை இலங்கை மீள வலியுறுத்துகின்றது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.