யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவு ; போருக்கு பின் வரலாறு காணாத வாக்கு பதிவு VIDEO

ஆசிரியர் - Admin

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு வாக்கு பெட்டிகள் எடுத்து வரப்படுகிறது. 

போரின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டம் முதன் முதலாக 70 சதவீத வாக்களிப்பைத் தாண்டுகின்றது.

யாழ்ப்பாணத்தின் வாக்குப் பதிவு பி.ப. 4 மணி வரை 65 சதவீதம். இதனுடன் யாழ்ப்பாண மாவட்டத்துக்குரிய தபால்மூல வாக்களிப்பு வீதம் 4 சதவீதத்தைக் கூட்ட வேண்டும். இதனிடையே வவுனியா 72 விழுக்காடு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று பல தரப்பினர்களும் குரல் கொடுத்தும், யாழில் 2015 ஆம் ஆண்டு 66.28 % (529,239 வாக்காளர்களில் 350,789 பேர் வாக்களிப்பு.) வாக்களிப்பே நடைபெற்றது.

ஆனால் இன்று மாலை 4 மணிக்கு முன்னர் 68 வீத வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் யாழில் அதி கூடிய வாக்கு பதிவான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது  JaffnaZone.com இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு