புதிய திருப்பம்..! இலங்கையிலிருந்து புதிய விமான சேவை
ஐரோப்பாவின் பிரபல விமானசேவை நிறுவனமான LOT Polish எயார் லயன்ஸ் முதல் முறையாக இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இலங்கை விமான சேவை வரலாற்றில் புதிய திருப்பமாக இது அமைந்துள்ளது.
LOT Polish எயார்லயின் போயிங் 787 டரீம்லைனர் விமானம் கடந்த திங்கட்கிழமை போலந்தின் தலைநகரமான வோர்சோவிலிருந் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்போது விசேட அதிதிகள்,விடுமுறையை திட்டமிடுவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் போலந்திலுள்ள வர்த்தக பிரதிநிதிகள் என பலரும் விமானத்தில் வருகை தந்திருந்தனர்.
இந்த விசேட அதிதிகளுக்குள் போலந்து உள்விவகார நடவடிக்கைகளுக்கான அமைச்சர் Adam Maciej Lang, இலங்கைக்கான போலந்து தூதுவர் Adam Burakowski,லொட் பொலிஷ் விமானச் சேவையின் பிரதம வணிக அதிகாரி Michal Fijol மற்றும் நிறுவன பேச்சாளர் Michal Czernicki ஆகியோருடன் போலாந்தின் 2009 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி மற்றும் லொட் பொலிஷ் விமானசேவையின் உதவியாளர் Olga Bulawa ஆகியோர் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்துக்கு இருபுறம் நீர்த்தாரை பாய்ச்சி அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்த புதிய சேவை தொடர்பில் அறிவிக்கும் விடே ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
இதில் போலந்திலிருந்து வருகைதந்திருந்த அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
“இந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய லொட் பொலிஷ் விமானசேவையின் பிரதான வணிக அதிகாரி Michal Fijot கூறுகையில்,
லொட் பொலிஷ் விமான சேவையை நாம் விரிவான சுற்றுலா சேவைக்காக நேரடியான விமான சேவையாக ஆரம்பித்துள்ளோம். எமது நாட்டுடன் கைகோர்த்த மையானது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.
ஆசியாவில் பார்வையிட வேண்டிய முக்கிய இடமாக இலங்கை காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு கிழமைக்கு மூன்று விமான சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதோடு இதன் மூலம் ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.
அத்துடன் இலங்கைப் பிரஜைகளுக்கு போலாந்திற்கோ அல்லது வேறெந்தவொரு ஐரோப்பிய நாட்டிற்கோ சௌகரியமாக செல்வதற்கு தேவையான சிறந்த வசதிகளை செய்துகொடுப்பதற்கு லொட் பொலிஷ் விமான சேவைகளுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
குளிர்கால சுற்றுலாப் பருவத்தின் தொடக்கத்திற்கான சரியான நேரத்தில் இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதோடு, எதிர்வரும் 2020 மார்ச் மாதம் முதல் லொட் பொலிஷ் விமான சேவையானது வாரத்திற்கு மூன்று தடவைகள் வோர்சோவிலிருந்து கொழும்புக்கானசேவையை வழங்கவுள்ளது.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய Hayleys இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹான் பண்டித்தகே, லொட் பொலிஷின் நேரடி விமான சேவையில் கொழும்புக்கு வந்த குழுவினருக்கு பாரிய வரவேற்பை வழங்க நினைக்கின்றேன். அத்துடன் எங்களது அழகான தீவைச் சுற்றிப்பார்க்க வருகைதந்த கௌரவ விருந்தினர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
நீங்கள் அனைவரும் ஒரு சிறந்த விருந்தோம்பலை அனுபவிப்பீர்கள் என நம்புகிறோம். ஒட்டு மொத்த சுற்றுலாத்துறையிலும் போலந்து மற்றும் மத்திய ஐரோப்பாவுடனான இலங்கையின் உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக லொட் பொலிஷ் விமான சேவைக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம்.
இது முழு சுற்றுலாத்துறைக்கும் பயனளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
போயிங் 787 ட்றீம்லைனர் விமானமானது எந்த வொருவிமானப் பயணிக்கும் அவர்களுக்குத் தேவைக்கேற்ப தெரிவுசெய்யக் கூடியவிதத்தில் மூன்று வகுப்புக்களைக் கொண்டுள்ளது.
லொட் வர்த்தகப் பிரிவில் நீட்டிஇழுக்கக்கூடிய இருக்கை வசதிகளுடன் ஆடம்பரமான உணவகவசதிகளும் கொண்டது.
லொட் பிரீமியம் இகோநொமிக் வகுப்பு பாரிய சிறந்த வசதிகளைக் கொண்ட ஆசனங்களைக் கொண்டு அமைந்துள்ளதோடு தமது பாதங்களை வசதியாக வைத்துக் கொள்ளக்கூடிய விதத்திலும் அமைந்துள்ளது.
அத்துடன் கொக்டேய்ல் மேசையுடன் கூடிய சிறந்த உணவுமற்றும் பாண பட்டியலும் உள்ளடங்கும். லொட் இகோநொமிக் வகுப்பில் பொழுது போக்கிற்காக usb இணைப்புடன் கூடிய தொலைக்காட்சி திரையொன்றும் மற்றும் பயணம் முழுவதும் பல்வேறு வகையான உணவு மற்றும் பானவகைகளை அனுபவிப்பதற்கு பயணிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
வருடம் ஒன்றுக்கு சுமார் 1.8 மில்லியன் பயணிகள் ஐரோப்பாவிலிருந்து கொழும்புக்கு பயணங்களை மேற்கொள்வர். லொட் தமது நவீனரக விமானங்களை பயன்படுத்தி 2018 ஆண்டில் 9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு தமது சேவையை வழங்கியுள்ளதோடு 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் என்ற பயணிகள் சேவை இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளது.
லொட் விமானச் சேவைவோர்சோவிலிருந்து மூன்று கண்டங்கள் ஊடாக 111 இலக்குகளுக்கு அதிகமான துரித மற்றும் இலகுவான விமான சேவையை உலகம் முழுவதும் வழங்கவுள்ளது.
1878ஆம் ஆண்டு வாஸ் பீ. ஹேலிஸினால் காலி நகரத்தை மையமாகக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஹேலிஸ் நிறுவனம் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் 140 வருடத்துக்கு மேலான சேவையை வழங்கி வருவதோடு, ஹேலீஸ் குழுமம் நிலையான புத்தாக்கத்துடன் உலகை சிறப்பாக எதிர்கொண்டு உலகின் 5 வலயங்களில் 16 பிரிவுகளில் தடம்பதித்துள்ள பல்நோக்கு நிறுவனமாகும்.
நிகழ்காலத்தில் இலங்கை வியாபார துறையில் முன்னணி இடத்தைபெற்றுள்ள நிறுவனம் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்ற முதலாவது நிறுவனமாகபட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் ஏற்றுமதிவருமானத்தில் 3.3மூ பங்களிப்பை ஹேலீஸ் நிறுவனமே வழங்குகின்றது.