தமிழர்கள் சிங்கள தேசத்திடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்களாம் - சுமந்திரன் ஆதங்கம்!

ஆசிரியர் - Admin
தமிழர்கள் சிங்கள தேசத்திடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்களாம் - சுமந்திரன் ஆதங்கம்!

தமிழர்கள் சிங்கள தேசத்திடம் அதிகமான எதிர்பார்க்கிறார்கள், 16 பாராளுமன்ற உறுப்பினர்களால் அவற்றை எப்படிப் பெற்றுத்தர முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். 

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில், சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்து தரவேற்றிய பதிவொன்றிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார். 

நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை என அவர் அப்பதிவில் தெரிவித்திருக்கின்றார். 

முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே? ஏன அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

பௌத்த சிங்கள – ரணில் அரசு ஈடாட்டம் கண்டபோது உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அந்த அரசைக் காப்பாற்றியவர் சுமந்திரன். சிறந்த சட்டவாளர். வாதத் திறமை மிக்கவர். தமிழ்த் தேசியத்தில் அவருக்கு உண்மையான பற்றுறுதி இருக்குமாயின் இந்தக் கேள்வி எழுப்பவேண்டிய அவசியமே இல்லை என தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழ் மக்கள் சட்ட ரீதியாக இலங்கையின் பூர்வீகக் குடிகள். அவர்களுக்கு வாழ்வுரிமை உள்ளது. தமது நிலத்தில் தாங்கள் நினைத்தவாறு – சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய தகுதி அவர்களுக்கு இருக்கின்றது. 

கல்வி, மொழி, பண்பாடு, நிலம் என ஒரு சுயாட்சி பிரதேசத்திற்கான கட்டுமானங்கள் அனைத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான தமிழர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் இணைக்கப்பட்டு இந்த தாயகத்தில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் - சிறிலங்கா அரசமைப்பின் கீழ் சமஷ்டி அடிப்படையில் - வாழக்கூடிய தகைமையை பெற்றுக்கொள்ள முடியும். 

சிறிலங்காவின் உச்ச நீதிமன்றில் இந்த தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் பன்னாட்டு நீதிப் பொறிமுறை மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சுமந்திரன் அறியாதவர் அல்லர். 

அதை விடுத்து, பன்னாடுகளின் வழிப்படுத்தலில், சிங்கள அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் சுமந்திரன் இத்தகைய நீலிக்கண்ணீர் வடிக்க அருகதை அற்றவர் என தமிழ்த் தேசிய இளைஞர்கள் முகப்புத்தக வாயிலாக சுமந்திரனுக்கு பதிலளித்து வருகின்றனர். 

சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள அரசுகளின் கைக்கூலிகளாகச் செயற்படும் வரை தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது எனவும் சுமந்திரன் போன்றவர்கள் தங்களால் செய்ய முடியாவிட்டால் ஒதுங்கிப்போகவேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Radio
×