கொழும்பையே வெளிநாடுகளுக்கு விற்றிருப்பார் கோத்தா!

ஆசிரியர் - Admin
கொழும்பையே வெளிநாடுகளுக்கு விற்றிருப்பார் கோத்தா!

தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கோத்தாபய ராஜபக்ஷவே உதவிகளை வழங்கினார் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு மெனிங் சந்தையின் வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு-10 மாளிகாவத்தை பகுதியிலிருந்து இயங்க ஆரம்பித்த தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கோத்தாவே உதவிகளை வழங்கினார். மத்தியஸ்தமான சிந்தனையுடைய முஸ்லிம்களை தாக்குதற்காகவே அவர்களுக்கு உதவிகளை கோத்தா வழங்கியிருந்தார்.

அதேபோல் புலிகள் அமைப்பிலிருந்து சில குழுக்களையும் இணைத்துகொண்டு தமிழர்கள் மீதான தாக்குதல்களை நடத்தியதாகவும், அவர்களூடாகவே பௌத்தர்களை தாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

'இராணுவத் தலைமையகத்திலிருந்தவர்களை வீதியில் தள்ளியுள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் இன்றும் அகதிகள் போன்று இருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது இராணுத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை ஷங்கரிலாவுக்கு விற்பனைச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ தரப்பின் ஆட்சி நீடித்திருந்தால் அப்பகுதியில் ஓர் அங்குலம் கூட மிஞ்சாமல் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து தனது பைகளை நிறைத்து கொண்டிருப்பார். அவர்களது ஆட்சி இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்திருந்தால் கொழும்பையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திருப்பார்' என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு