SuperTopAds

வடக்கில் சஜித் சூறாவளி பிரசாரம்!

ஆசிரியர் - Admin
வடக்கில் சஜித் சூறாவளி பிரசாரம்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நல்லூரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டம் நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இன்று சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.