கிளிநொச்சியில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்! நீதவான் கொடுத்த உத்தரவு

கிளிநொச்சியில் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை யாழ். சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ.ஆனந்தராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த 17 ஆம் திகதி ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதன்போது தலை மற்றும் கைப்பகுதிகளில் காயமுற்ற ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதுடன், இதில் மாணவர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்தனர்.