வல்வை வங்கி முகாமையாளரின் வீடு நள்ளிரவில் சுற்றி வளைப்பு- இருவர் கைது!

ஆசிரியர் - Admin
வல்வை வங்கி முகாமையாளரின் வீடு நள்ளிரவில் சுற்றி வளைப்பு- இருவர் கைது!

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்த பொலிசார், அவரது துணைவியின் சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின், தொண்டைமானாறு அரசடிப் பகுதியில் உள்ள வீடு இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. பொலிஸார் அத்துமீறி வீட்டு வளவுக்குள் வந்தனர் என்றும் அதனால் அவர்களை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டேன் என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸார் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் பயணித்த ஜீப் வாகனம் குறித்த முகாமையாளரின் வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாம் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர்.

அத்துடன் இன்று நண்பகல் 12 மணியளவில் முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்தனர். தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு